சிறப்பாக விளையாடி வந்த போதிலும் ஒருநாள் போட்டி அணியிலிருந்து நீக்கப்பட்டது தமக்கு வேதனை அளிப்பதாக உள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க என்ன தேவை என்று எனக்கு தெரியவில்லை.ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக ஆடினால் அணியில் இடம் பெற முடியுமா என்று தெரியவில்லை.
ஒரு நாள் போட்டிகளில் நான் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த போதிலும், அதிலிருந்து நீக்கப்பட்டது வேதனை தருகிறது.கடந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்த நிலையிலும், அணியிலிருந்து நீக்கப்பட்டேன் ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தூலிப் கோப்பை போட்டியில் நான் விளையாடுவதன் நோக்கம் ஒருநாள் போட்டி அணியில் மீண்டும் இடம் பெறுவதற்காக அல்ல. தென்னாப்பிரிக்க தொடர் முக்கியமானது என்பதால் அதில் சிறப்பாக ஆட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.