ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வருகிற ஆகஸ்டு மாதம் சீனாவில் உள்ள பீஜிங் நகரில் தொடங்குகிறது. போட்டியில் கலந்துகொள்ள மற்றும் பார்வையிட லட்சக் கணக்கானோர் வருவார்கள்.எனவே தீவிரவாத காப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அல் கொய்தா மற்றும் உள்ளூர் தீவிரவாதிகள் போட்டியை சீர்குலைக்கலாம் என்று கருதி கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது.
சீனாவில் உள்ள ஹின் ஜியாங் பகுதியில் உய்க்குர் என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது.
அவர்கள் போட்டிகளை சீர்குலைக்க சதி திட்டம்தீட்டி இருந்ததை கண்டு பிடித்தனர். அவர்களில் 15பேரை போலீ சார் கைது செய்தனர்இன் னொரு இடத்தில் 2 தீவிர வாதிகளை கைது செய்தனர்.