ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றதற்கு, நடுவர்களின் தீரிப்பும் ஒரு காரணம் என்று பயிற்சியாளர் ஜாக்யூம் கார்வலோ கூறினார்.
சிலியின் நடந்து முடிந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியுற்று, 80 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த இந்திய அணி இன்று மும்பை திரும்பியது.
இந்தத் தோல்வியால் தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக முடிவு செய்துள்ள கார்வலோ, போட்டிகளுக்கு தயாராவதில் எவ்வித தவறும் இல்லை என்றும், ஆனால் போதிய அளவு திறமையை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இறுதிப் போட்டியில் நடுவர்களின் தீர்ப்பும் ஏற்புடையதாக இல்லை என்றும் அவர் கூறினார்.