இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளுக்கான 2-வது கட்ட ஏலத்தில், ஆஸ்திரேலிய வீரர் ஹோப்ஸ் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 20 லட்சத்திற்கு விலை போனார்.
மும்பையில் நடத்தப்பட்ட ஏலத்தில் 14 வெளிநாட்டு வீரர்களும், 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் 14 பேரும் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
இப்போட்டிகளில் பங்கேற்கும் எட்டு அணி வீரர்களின் இறுதிப்பட்டியல் வரும் 18-ம்தேதி அறிவிக்கப்படும் என்று ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி தெரிவித்தார்.
2-ம் கட்ட ஏலத்தில் விலை போன வீரர்கள் விவரம் :
பெங்களூர் அணி
மிஸ்பா உல்-ஹக் (பாகிஸ்தான்)-ரூ.50 லட்சம்
அப்துர் ரசாக் (வங்கதேசம்)- ரூ.20 லட்சம்
ரோஸ் டெய்லர் (நியூசிலாந்து)-ரூ.40 லட்சம்
விராட் கோக்லி, கோஸ்வாமி (19வயதுக்குட்பட்ட இந்திய அணி)
ஜெய்ப்பூர் அணி
மோர்னே மோர்கல் (தென்ஆப்பிரிக்கா)- ரூ.24 லட்சம்
ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா)-ரூ.50 லட்சம்
சோகைல் தன்விர் (பாகிஸ்தான்)-ரூ.40 லட்சம்
தருவர் கோக்லி, ரவிந்திர ஜடேஜா (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி)
கொல்கத்தா
சல்மான் பட் (பாகிஸ்தான்)-ரூ.40 லட்சம்
முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்)-ரூ.40 லட்சம்
சித்தார்த் கவுல், இக்பால் அப்துல்லா (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி)
மொகாலி
ஜேம்ஸ் ஹோப்ஸ் (ஆஸ்திரேலியா)- ரூ.1 கோடியே 20 லட்சம்
லுகே போமர்ஸ்பச் (ஆஸ்திரேலியா)- ரூ.20 லட்சம்
மில்ஸ் (நியூசிலாந்து)- ரூ.60 லட்சம்
தன்மய் ஸ்ரீவஸ்தவா, அஜிதேஸ் அர்கல் (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி)
டெல்லி
பிரெட் கீவ்ஸ் (ஆஸ்திரேலியா)-ரூ.20 லட்சம்
பிரதீப் சாங்வான் (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி)
மும்பை
பிரின்ஸ் (தென்ஆப்பிரிக்கா)-ரூ. 70 லட்சம்
சவுரப் திவாரி, மனிஷ் பாண்டே (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி)
சென்னை
நபோலின் என்ஸ்டின், அபினவ் முகுந்த், விராஜ் காட்பே (19வயதுக்குட்பட்ட இந்திய அணி)