இலங்கை கிரிக் கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப் பட்டுள்ளது. ஜெயசூர்யா, முரளீதரன் ஆகியோர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் அதிக விலைக்கு ஒப்பந்தமானவர்கள்.
இதே போல வேகப்பந்து வீரர் மலிங்காவும் நீக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி வருமாறு:-
ஜெயவர்த்தனே(கேப்டன்), சங்ககரா, தரங்கா, திலகரத்னே, தில்சான், சமரசில்வா, மகிளாஉத்வதே, ஜெகன் முபாரக், கபுகேந்திரா, சமிந்தாவாஸ், வீரரத்னே, மலிங்காபண்டாரா, குலசேகரா, அமரசிங்கே, அஜந்தாமெண்டிஸ், துஷ்கரா.
இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே யான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் 22-ந்தேதி கயானாவில் தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வருமாறு:-
கிறிஸ்கெய்ல்(கேப்டன்), சர்வான், பிராவோ, சுலைமான்பென், சந்திரபால், கோலின்ஸ், எட்வர்ட்ஸ், ஹிண்ட்ஸ், ஜெரோம் டெய்லர், அமித்ஜெதர், தேவன்சுமித், சந்தர்கூன், போவெல், ராம்தின், சாமுவேல்ஸ்.