கலிஃபோர்னியாவில் நடைபெறும் பசிபிக் லைஃப் ஒபன் டென்னிஸ் போட்டிகளின் இரண்டாம் சுற்றுக்கு, இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பெதானி மாட்டெக் இணை முன்னேறியது.
இப்போட்டிகளின் தரநிலையில் 7-ம் இடத்திலுள்ள இந்த இணை தங்களது முதல் சுற்றில், போலந்தின் கிளாடியா ஜான்ஸ் மற்றும் செக். குடியரசின் காபிரிலா நவ்ரதிலோவா இணையை எதிர்கொண்டது.
இதில், சானியா இணை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் போலந்து - செக். குடியரசு இணையை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.
அதேபோல், மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், ரஷ்யாவின் யாரோஸ்லாவா ஷ்வேடோவை 2-6, 6-4, 7-6( 4) என்ற செட்களில் சானியா வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து, இவர் தனது இரண்டாவது சுற்றில் உக்ரைனின் ஓல்கா சாவ்சுக்கை எதிர்கொள்கிறார்.