ஒருதினப் போட்டிகளுக்கான எல்ஜி-ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தை கைப்பற்றியது.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரில் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதன் பலனாக, அந்த அணிக்கு தரவரிசைப் புள்ளிகளில் ஏற்றம் உண்டானது.
அதேநேரத்தில், இந்தியாவுக்கு எதிரான இரண்டு இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்தது, ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
தென் ஆப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் தலா 127 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், டெசிமல் புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்கா 0.529 புள்ளி முன்னிலைப் பெற்று முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ளது.
இந்தத் தரவரிசைப் பட்டியலில், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகியவை 3-வது மற்றும் 4-வது இடங்களையும், அடுத்தடுத்த இடங்களில் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளும் உள்ளன.