கலிபோர்னியாவின் இண்டியன்வெல்ஸ் பகுதியில் நடந்து வரும் பசிபிக் லைப் ஓபன் டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 4வது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா முன்னேறியுள்ளார்.
இத்தொடரின் 3வது சுற்றில் இஸ்ரேல் வீராங்கனை ஷஹார் பீர் உடன் மோதிய சானியா, முதல் செட்டை 6-7 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து சுதாரித்த சானியா 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் போராடி கைப்பற்றினார்.
வெற்றியை நிர்ணயிக்கும் 3வது மற்றும் இறுதி செட்டை கைப்பற்ற இருவருமே கடுமையாக போராடினாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா 6-3 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் கைப்பற்றினார்.
மற்றொரு 3வது சுற்றில், டனியெலா ஹண்டுசோவா மற்றும் செங்-ஜி பலப்பரீட்சை நடத்த உள்ளனர். இதில் வெற்றி பெறுபவர், சானியா மிர்சாவுடன் 4வது சுற்றில் மோதுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.