கலிஃபோர்னியாவில் நடைபெற்று வரும் பசிபிக் லைஃப் ஒபன் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி - பகாமஸின் மார்க் நவ்லஸ் இணை முன்னேறியது.
இப்போட்டிகளின் தரவரிசையில் 6-ம் இடத்திலுள்ள இந்த இணை, தங்களது இரண்டாம் சுற்றில் நேற்றிரவு ரஷ்யாவின் நிக்கோலே டேவிடென்கோ - ஜெர்மெனியின் நிக்கோலஸ் கைஃபர் இணையை எதிர்கொண்டது.
இதில், பூபதி இணை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்ய - ஜெர்மெனி இணையை வீழ்த்தி, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.
தரநிலையில் 8-ம் இடத்திலுள்ள இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஆஸ்திரேலியாவின் பால் ஹான்லீ இணை இன்று காலிறுதிச் சுற்றில் கனடாவின் டானியல் நெஸ்டர் - செர்பியாவின் நேனட் ஜிமோன்ஜிக் இணையை எதிர்கொள்கிறது.
அதேபோல், மகளிர் ஒற்றையர் போட்டியின் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில், உலகத் தரவரிசையில் 8-வது இடத்திலுள்ள ஸ்லோவாக் டேனியலா ஹன்டுசோவாவை இந்தியாவின் சானியா மிர்சா எதிர்கொள்கிறார்.