பசுபிக் லைப் டென்னிஸ் போட்டியிலிருந்து இந்திய வீராங்கனை சானியா வெளியேறினார்.
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் பசுபிக் லைப் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், காலிறுதிக்கு முந்தைய சுற்றையில் ரஷ்ய வீராங்கனை ஹன்டுசோவாவிடம் 6-1, 7-6 (7/4) என்ற செட் கணக்கில் சானியா தோல்வியடைந்தார்.
இந்த ஆட்டத்தின் போது, கையின் மணிக்கட்டில் ஏற்பட்ட வலி காரணமாக அவதிப்பட்ட சானியா, இறுதியில் போராடி தோற்றார். இதன் காரணமாக போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.
இதுகுறித்து சானியா கூறுகையில், "இந்த தோல்வி மிகவும் வேதனையளிக்கிறது. இந்த ஆட்டத்தில் நான் எப்படி ஆடினேன் என்ற எனக்கு தெரியவில்லை. பந்து வெளியே செல்லும்போது என்னால் மணிக்கட்டை தூக்கவே முடியவில்லை" என்றார்.
இதுகுறித்து ஹன்டுசோவா கூறுகையில், "சானியா ஒரு மிகச்சிறந்த வீராங்கனை. இதனால் இந்த ஆட்டம் எனக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எளிதாக வெற்றி பெற்றுவிட்டேன்' என்றார்