பிரான்ஸ்சில் நடைபெற்றுவரும் 17-வது மெலடி ஆம்பர் பிளைன்ட்ஃபோல்ட் மற்றும் அதிவேக செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
இந்தத் தொடரின் 5-வது சுற்றில் பீட்டர் லேகோவுடன் விளையாடிய ஆனந்த், பிளைன்ட்ஃபோல்ட் ஆட்டத்தில் டிரா செய்தார்; ஆனால் அதிவேக செஸ் ஆட்டத்தில் தோல்வி கண்டார்.
இதனால், அரைப்புள்ளிகளை மட்டுமே பெற்ற அவர், மொத்தம் 4.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
இந்தத் தொடரின் முதலிடத்தில் வெசலின் தபலோவ், லெவ் அரோனியன் மற்றும் இன்று பிறந்தநாள் விழா கொண்டாடும் வாசிலி இவான்சுக் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் உள்ளனர்.