தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஹர்பஜன்சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேநேரத்தில், முதல் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் ஷர்மா இடம்பெறவில்லை.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அணி விபரம் :
வாசிம் ஜாஃபர், சச்சின் டெண்டுல்கர், சேவாக், கங்குலி, திராவிட், லஷ்மண்,தோனி, யுவராஜ் சிங், ஆர்பி சிங், ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக், அனில் கும்ப்ளே (கேப்டன்), இர்பான் பதான், ஸ்ரீசாந்த்.
பியுஷ் சாவ்லா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரிசர்வ் ஆட்டக்காரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொடரின் முதல் போட்டியில், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி சென்னையிலும், 2-வது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 3-ம் தேதி அகமதாபாத்திலும் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.