அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரில், இந்திய அணியில் இருந்து திராவிட், கங்குலி ஆகியோர் நீக்கப்பட்டது நியாயம்தான் எனும் விதமாக கேப்டன் தோனி கூறினார்.
கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனக்கு எந்தெந்த வீரர்கள் வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருந்ததாகவும், அதன்படி தேர்வாளர்களிடம் தாம் கேட்டுக்கொண்ட இளம் வீரர்கள் கிடைத்ததால் வெற்றி கிட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் திராவிட் மற்றும் கங்குலியின் பெயர்களைக் குறிப்பிடாத அவர், ஆஸ்திரேலியாவில் தமது தலைமையிலான அணி வெற்றி பெறாவிட்டால், எத்தகைய விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்ட நிலையில், இந்த அணியை பாராட்டியே தீரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா, இலங்கை உடனான முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரை, 23 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது