கலிஃபோர்னியாவில் நடைபெற்று வரும் பசிபிக் லைஃப் ஒபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு, இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பெதானி மாட்டெக் இணை முன்னேறியது.
இப்போட்டிகளின் தரநிலையில் 7-ம் இடத்திலுள்ள இந்த இணை தங்களது காலிறுதிச் சுற்றில், உலகத் தரவரிசையில் 9 மற்றும் 10-ம் இடங்களிலுள்ள தைபையின் யங் ஜன் சான் - சியா ஜுங் சங் இணையை எதிர்கொண்டது.
இதில், சானியா இணை 7-5, 4-6 மற்றும் 11-9 என்ற செட் கணக்கில் சங் - சன் இணையை வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து இந்திய - அமெரிக்க இணை தங்களது அரையிறுதிச் சுற்றில் சீனாவின் ஜி யங் மற்றும் ஜீ ஜெங் இணையை எதிர்கொள்கிறது.
இதனிடையே, இந்தியாவின் மகேஷ் பூபதி - பகாமஸின் மார்க் நவ்லஸ் இணையும், இந்தியாவின் பயஸ் - ஆஸ்திரேலியாவின் பால் ஹான்லி இணையும் தங்களது காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தனர்.