அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸில் நடைபெறும் பசிபிக் லைஃப் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனைகள் மரியா ஷரபோவா, ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா ஆகியோர் மோதுகின்றனர்.
டேனியலா ஹன்டுசோவாவை 7-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்திய மரியா ஷரபோவா தொடர்ந்து தனது 18-வது வெற்றியைப் பதிவு செய்தார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா, 10-ம் தரவரிசை வீராங்கனையான போலந்து நாட்டின் ராட்வான்ஸ்காவை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.