அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸில் நடைபெறும் பசிபிக் லைஃப் ஓபன் ஆண்கள் காலிறுதி ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ரபேல் நடாலும், நோவக் ஜோகோவிக்கும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.நடால், நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜேம்ஸ் பிளேக்கை 7-5, 3-6, 6-3 என்ற செட்களில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சுவிஸ் நாட்டின் ஸ்டேனிஸ்லாஸ் வாவ்ரின்காவை, நோவக் ஜோகோவிக் 7-6, 6-2 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் நடாலும், ஜோகோவிக்கும் மோதுகிறார்கள். ஜோகோவிக் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.