பசிபிக் லைப் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர் தோல்வி அடைந்தார்.இறுதிப் போட்டியில் மார்டி பிஷ் மற்றும் ஜோகோவிக் மோதுகின்றனர்.
இந்த போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான பெடரர், அமெரிக்க வீரர் மார்டியுடன் மோதினார். இதில் மார்டி 6-3, 6-2 எனும் செட் கணக்கில் பெடரரை வீழ்த்தினார்.
இளம் வீரரான பிஷ், பெடரரை வீழ்த்துவது இதுவே முதல் முறை.
மற்றொரு அரையிறுதியில் பிரெஞ்ச் ஓப்பன் சாம்பியனான நடாலும் செர்பிய வீரர் ஜோகோவிக்கிடம் தோல்வி அடைந்தார்.
இதனால் இறுதிப்போட்டியில் மார்டி பிஷ் மற்றும் ஜோகோவிக் ஆகியோர் மோதுகின்றனர்.