திபெத் விவகாரம் தொடர் பாக பீஜிங் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.வரும் ஆகஸ்டில்(824) சீன தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி நடக்க உள் ளது. இதற்காக முழுவீச்சில் சீனா தயாராகி வருகிறது.
திபெத் பிரச்னை: இந்த நேரத்தில் திபெத் பிரச்னை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. திபெத் மற்றும் தைவான் அணிகள் சேர்ந்து ஒருங்கிணைந்த சீன அணியாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் என்று சீனா அறிவித்தது. இது விடுதலை கோரி போராடி வரும் திபெத் மக்களிடையே கோபத்தை அதிகரிக்கச் செய்தது. தங்களது மண்ணில் இருந்து சீனா வெளியேற வேண்டுமென சமீபத்தில் மாபெரும் போராட்டம் நடத்தினர். இதனை வழக்கம் போல் இரும்புக்கரம் கொண்டு அடக்கியது சீனா. அப்போது நுõற்றுக்கணக்கான திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர்.
தலாய்லாமா கண்ணீர்: அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து, திபெத் உரிமைக்காக நீண்ட காலமாக போராடி வரும் தலாய்லாலா கண்ணீருடன் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து சீனாவுக்கு பாடம் புகட்ட உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. முதல் கட்டமாக பீஜிங் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வலியுறுத்தியுள்ளன. குறைந்தபட்சம் துவக்க விழா நிகழ்ச்சிகளை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க திட்டமிட்டுள்ளன.
மனித உரிமை பாதிப்பு: உலகில் உள்ள மனித உரிமை அமைப்புகள் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பிரான்சில் உள்ள ஆர்.எஸ்.எப் என்ற அமைப்பு ஒலிம்பிக் உறுதிமொழி எதையும் சீனா கடைபிடிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,""கடந்த 2001ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை சீனா பெற்றது. அப்போது அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. திபெத்துக்கு எதிரான அடக்குமுறை தொடர்கிறது. சீனாவில் பத்திரிகையாளர்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது. செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இங்குள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. எனவே உலக தலைவர்கள் பீஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும்,'' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.