அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் பகுதியில் நடந்த பசிபிக் லைப் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் பிரிவு ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக் கைப்பற்றியுள்ளார்.பரபரப்பான இத்தொடரின் இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் மர்டி ஃபிஷ் உடன் பலப்பரீட்சை நடத்திய ஜோகோவிக், 6-2 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
இதையடுத்து சுதாரித்த மர்டி ஃபிஷ், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது செட்டை 5-7 என்ற புள்ளிக்கணக்கில் போராடி கைப்பற்றினார். வெற்றியை உறுதி செய்யும் இறுதி செட்டில் ஜோகோவிக் அதிரடியாக விளையாடி, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி பசிபிக் ஓபன் ஆண்கள் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
முன்னதாக கடந்த 22ம் தேதி நடந்த அரையிறுதிப் போட்டியில், ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடாலுடன் மோதிய ஜோகோவிக், 6-3, 6-2 என்ற நேர்செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
கடந்தாண்டு நடந்த பசிபிக் ஓபன் போட்டியில், ரபேல் நடாலிடம் தோல்வியுற்று பட்டத்தை தவற விட்ட ஜோகோவிக், இந்தாண்டு மர்டி ஃபிஷ்ஷை வென்று பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.