இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதின. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக் கெட் போட்டி நேப்பியரில் நடந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்னும், நிïசிலாந்து 168 ரன்னும் எடுத்தன.இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 467 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்துக்கு 553 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
4-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்து இருந்தது. இன்று 5-வது மற்றும் கடைசிநாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 431 ரன்னில் `ஆல்அவுட்' ஆனது. இதனால் இங்கிலாந்து 121 ரன்னில் வெற்றி பெற்றது. டெய்லர் 74 ரன்னும், பெல் 69 ரன்னும், பிளம்மிங் 66 ரன்னும் எடுத்தனர். பனேசர் 6 விக்கெட் கைப்பற்றினார்.
இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ் டில் நியூசிலாந்தும், 2-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருந்தன.
இங்கிலாந்து வேகப்பந்து வீரர் சைடுபாட்டம் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.