இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கயானாவில் நடைபெற்றது. இதில் இலங்கை முதல் இன்னிங்சில் 476 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 280 ரன்னும் எடுத்தன. இலங்கை 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட்இண்டீசுக்கு 437 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்து இருந்தது.
நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 315 ரன்னில் `ஆல்அவுட்' ஆனது. இதனால் இலங்கை 121 ரன்னில் வெற்றி பெற்றது. பிராவோ 83 ரன்னும், சர்வான் 72 ரன்னும், கெய்ல் 51 ரன்னும்(அவுட்இல்லை) எடுத்தனர். சமிந்தாவாஸ் 5 விக்கெட்டும், முரளீதரன் 3 விக்கெட்டும் கைப்பற்றினார் கள்.
இலங்கை அணி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இதுவாகும். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.
இந்த வெற்றி மூலம் 2 டெஸ்ட் போட்டி தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் ஏப்ரல் 3-ந்தேதி தொடங்குகிறது.