சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் தென்ஆப்ரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 304 ரன் குவித்துள்ளது. அம்லா 85 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி முதலில் பேட் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கிய கேப்டன் ஸ்மித் 73 ரன், நீல் மெக்கன்ஸி 94 ரன் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய அம்லா சிறப்பாக விளையாடி, தனது 6வது டெஸ்ட் அரைசதத்தை பூர்த்தி செய்தார். எனினும் அவருடன் ஜோடி சேர்ந்த காலிஸ் 13 ரன், பிரின்ஸ் 23 ரன் எடுத்த நிலையில் வெளியேறினர்.
4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டிவில்லிர்ஸ், அம்லாவுடன் இணைந்து விக்கெட் சரிவை நிறுத்தினார். முதல் நாள் ஆட்டம் முடிவில் அந்த அணி 304 ரன்கள் எடுத்துள்ளது. அம்லா 85 ரன், டிவில்லிர்ஸ் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்திய தரப்பில் கேப்டன் அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.