அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும், முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரரானார். உலக அளவில் 6 இடத்தைப் பிடித்தார்.
சென்னையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 65 ரன்களுடன் களத்தில் இருந்த திராவிட், இன்று களமிறங்கிய பின் அவர் 80 ரன்கள் எடுத்திருந்தபோது இச்சாதனையை நிகழ்த்தினார். 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இச்சாதனையை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.
உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்த வீரர்களில் 3 பேர் இந்தியர்கள் ஆவர், இரண்டு பேர் ஆஸ்திரேலியர்கள், ஒருவர் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆவர்