பிரான்சின் நெய்ஸ் நகரில் நடந்து முடிந்த ஆம்பர் சர்வதேச செஸ் தொடரில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. இறுதிச்சுற்றில் ஹாலாந்து வீரர் லோக் வேன்வெலி உடனான 2 ஆட்டங்களையும் ஆனந்த் டிரா செய்தார்.
இத்தொடரின் 10வது சுற்றின் முடிவில் 13.5 புள்ளிகள் பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அர்மேனிய வீரர் அரோனியன், இறுதிச்சுற்றில் (11வது) ஹங்கேரி வீரர் பீட்டர் லீகோவுடனான பிளைன்ட் ஃபோல்ட் மற்றும் ரேப்பிட் பிரிவு ஆட்டங்களை டிரா செய்தார்.
இதன் மூலம் மொத்த புள்ளிகளின் அடிப்படையில், 14.5 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக், பல்கேரிய வீரர் தொபலோவ், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பீட்டர் லீகோ ஆகியோர் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உக்ரைன் வீரர் இவான்சுக் ஆகியோர் 11 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.
இத்தொடரில் மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.