மணிக்கட்டில் ஏற்பட்ட வலி காரணமாக, சோனி எரிக்சன் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து இந்திய வீராங்கனை சானியா விலகியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பசிபிக் லைப் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று விளையாடியபோது, இந்திய வீராங்கனை சானியாவுக்கு வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் மியாமி நகரில் தற்போது நடைபெற்று வரும் சோனி எரிக்சன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா பங்கேற்றார்.
முதல் சுற்றில் 'பை' வாங்கி, நேரடியாக 2வது சுற்றில் ஜெர்மனியின் சபீன் லிசிக்கியுடன் சானியா மோதவிருந்தார்.
இந்நிலையில், மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால், போட்டியிலிருந்து விலகுவதாக சானியா அறிவித்துள்ளார்.