பெங்களூர் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டி யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 4 வது வெற்றியை பதிவு செய்தது. பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்க ளூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத் தில் வெற்றது சென்னை கிங்ஸ்.
டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன் களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூர் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் டுகளையும் இழந்து 165 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
முதலில் ஆடிய சென்னை அணியில் மைக்கேல் ஹசி 38 பந் துகளில் 47 ரன்களை எடுத்தார்.
ரேய்னா 28 ரன்களைச் சேர்த்தார்.
கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 65 ரன் களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
இதில் 9 பவுண்டரிகளும், 3 சிக் ஸர்களும் அடங்கும்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்தது.
பெங்களூர் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வாசிம் ஜாபர், சிப்லி ஆகியோர் களம் இறங்கினர். சிப்லி 8 ரன்க ளில் ஆட்டம் இழந்தார்.
இதனையடுத்து ஜாபருடன் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இவர் கள் இருவரும் அரை சதம் கடந்த னர். டெய்லர் 53 ரன்களிலும் வாசிம் ஜாபர் 50 ரன்களில் ஆட் டமிழந்தார்.
இவர்களுக்குப்பின் வந்த பெங் களூர் அணி வீரர்கள் எவரும் நிலைத்து நின்று ஆடவில்லை.
கேப்டன் டிராவிட் முதல் பந்தி லேயே எல்.பி.டபிள்யூ முறையில் ரன் எதுவும் எடுக்காமல் பரிதாப மாக வெளியேறினார்.
இறுதியில் பெங்களூர் சாலஞ் சர்ஸ் 19.4 ஓவர்களில் 165 ரன்க ளுக்கு அனைத்து விக்கெட்டுக ளையும் இழந்தது.
சுருக்கமான ஸ்கோர்: சென்னை:20 ஓவர்களில் 178-5 (தோனி 65, மைக்கேல் ஹசி 47 கோனி 3-34) பெங்களூர்19.4 ஓவர்களில் 165 (டெய்லர் 53, வாசிம் ஜாபர் 50, ஜாகிர்கான் 3-38)