ரொனால்டோ மற்றும் செக்ஸ் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை பிரேசிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ. சமீபத்தில் இவர் அதிகாலையில் நேரத்தில் மூன்று செக்ஸ் தொழிலாளர்களுடன் அருகிலிருந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
அவர்கள் மூவரும் பெண்கள் அல்ல என்பதை தாமதமாக தெரிந்து கொண்ட ரொனால்டோ, தலா ரூ. 25,000 கொடுத்து, அவர்களிடம் இருந்து தப்ப முயற்சி செய்துள்ளார். இதனை இருவர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஒருவர் மட்டும் ரொனால்டோ தங்களுடன் பேசி கொண்டிருந்ததை "வீடியோ' எடுத்து ரூ. 12 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளாõர். பின்னர் தெருவில் ரொனால்டா தங்களுக்கு பணம் தர மறுக்கிறார் என கூச்சல் போட்டுள்ளார். அவரது காரை உடைத்து பொருட்களை திருட முயன்றதாகவும் தெரிகிறது. இதையடுத்து போலீஸ் தலையிட்டது. இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ படம் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""ரொனால்டோ எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் மீது செக்ஸ் தொழிலாளர் ஒருவர் பணம் கொடுக்கவில்லை என புகார் செய்துள்ளார். ரொனால்டோ மற்றும் இரண்டு செக்ஸ் தொழிலாளர் களையும் தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப் போம். ரொனால்டோவை மிரட்டிய செக்ஸ் தொழிலாளி மீது வழக்கு தொடர்ந்துள்ளோம்,'' என்றார்.
இவ்விவகாரத்துக்கு பின்னர் ரொனால்டோவின் மதிப்பு பிரேசிலில் குறையவில்லை என்கிறார் அவரது ரசிகை ஒருவர். இது குறித்து அவர் கூறுகையில், ""ரொனால்டோ வின் புகழுக்கு களங்கம் விளைவிக்க யாரே செய்த சதி இது. அவர் ஏன் இது போன்ற செக்ஸ் தொழி லாளர்களுடன் வெளியில் செல்ல வேண்டும்,'' என்றார்.