பல்வேறு நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஒலிம்பிக் ஜோதி சீனா வந்தது.
சீன தலைநகர் பீஜிங்கில் வரும் ஆகஸ்டில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. இதற்காக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஒலிம்பிக் ஓட்டம் துவங்கியது.
பிரிட்டன், பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா உள்பட 20 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த இந்த ஒலிம்பிக் ஜோதி பலத்தப் பாதுகாப்புடன் சீனா வந்தது.
இதை தொடர்ந்து, ஹாங்காங்கில் இன்று ஒலிம்பிக் ஓட்டம் துவங்கியது. ஹாங்காங் நடிகர் ஆன்டி லாவ் உள்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நூற்றுக்கணக்கான திபெத்தியர்களை போலீசார் கைது செய்தனர். பாதுகாப்புக்காக சுமார் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.