களிமண் தரையில் விளையாடிய கடைசி 101 போட்டிகளில் 100-ல் வெற்றி பெற்று, ஸ்பெயினின் டென்னிஸ் வீரர் சாதனை படைத்துள்ளார்.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நடந்து முடிந்த தனது நாட்டு வீரர் ஃபெலிசியானோ லோபஸை வீழ்த்தி, அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
இப்போட்டியில் ஃபெலிசியானோவை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்த நாடல், காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
உலகத் தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள நாடல், தொடர்ந்து நான்காவது முறையாக பார்சிலோனா டென்னிஸ் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் விளையாடி வருகிறார்.
அவர் தனது காலிறுதிச் சுற்றில், அர்ஜெண்டினாவின் ஜான் க்னாசியோ செலாவை சந்திக்கவுள்ளார்.