அக்தர் மீதான 5 வருட காலத் தடையை அடுத்த ஒரு மாதத்துக்கு நிறுத்திவைக்க பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ஷோயிப் அக்தர் விளையாடுவதற்கு வகை செய்யப்படுகிறது.
அக்தர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அஃப்தாப் ஃபரூக் தலைமையிலான மூவர் விசாரணைக்கு, முறைப்படியான விசாரணை தொடங்கும் வரை தடையை நிறுத்திவைப்பதாக அறிவித்தனர்.
இதுதொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை, வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் அணிக்காக 5 ஆண்டுகளுக்கு விளையாடக்கூடாது என அக்தருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள தடை நீடிக்கும் என்றும், அதேநேரத்தில் அவர் வெளிநாடுகளில் எங்கு வேண்டுமானாலும் கிரிக்கெட் விளையாடத் தடையில்லை என்றும் கடந்த வாரம் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி உத்தரவிட்டது.
ஆனால், தடை நீக்கப்படும் வரை அக்தர் வேறெந்த தொடரிலும் விளையாடக் கூடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாக கவுன்சில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் ஷாருக்கானுக்குச் சொந்தமான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் 425,000 அமெரிக்க டாலர்களுக்கு அக்தர் ஏலத்தில் எடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.