இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு பத்ம் விபூஷன் விருது வழஙகப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில், சச்சினுக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பத்ம விபூஷன் விருதை வழங்கினார்.
விருதை பெற்றுக் கொண்டு சச்சின் பேசுகையில், "இந்த 18 ஆண்டுகளில் ஏகப்பட்ட விருதுகளை நான் பெற்றுள்ளேன். என்றாலும் இந்த விருதுதான் மனதிற்கு இதமாக உள்ளது. இந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை" என்றார்.
இந்த விழாவில் சச்சினின் மனைவி கலந்து கொண்டார்.