சீனாவில் இந்த ஆண்டு பீஜிங் மற்றும் ஹாங்காங்கில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் நிகழ்வுகளை பார்ப்பதற்கு, சீனாவின் உள்நாட்டு பார்வையாளர்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்த அனுமதிச் சீட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக, ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த அனுமதிச்சீட்டுக்களின் மூன்றாவது மற்றும் இறுதிகட்ட விற்பனைகள் செய்த பாங்க் ஆப் சீனா வங்கியின் கிளைகள் முன்பு கடந்த திங்கட்கிழமை மக்கள் நீண்ட வரிசையில் நின்று இவற்றை வாங்கிச்சென்றனர்.
மொத்தமுள்ள ஏழு மில்லியன் ஒலிம்பிக் அனுமதிச் சீட்டுக்களில், மூன்றில் ஒருபங்கு சீட்டுக்கள் சீனாவின் உள்நாட்டு பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள அனுமதி சீட்டுக்கள், மற்ற நாடுகளின் ஒலிம்பிக் குழுக்கள் மூலம் அந்தந்த நாட்டுப் பார்வையாளர்களுக்காக விற்கப்படுகிறது