பல்வேறு நாடுகளில் பல்வேறு தடைகளை தாண்டி சீனா வந்த ஒலிம்பிக் சுடர், இறுதியாக இன்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தது.
சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்டில் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த மார்ச் மாதம் தனது பயணத்தை தொடங்கிய ஓலிம்பிக் சுடர், பல்வேறு நாடுகளில், பல்வேறு தடைகளை தாண்டி இறுதியாக கடந்த வாரம் சீனா வந்து சேர்ந்தது.
உலகிலேயே மிக உயரமான சிகரம் என்று பெருமைப்பெற்ற 8 ஆயிரத்து 844 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு இன்று ஒலிம்பிக் சுடர் கொண்டுவரப்பட்டது. அங்கு சீனாவின் தேசியக்கொடியும் பறக்க விடப்பட்டது.
19 உறுப்பினர் கொண்ட குழுவினர் ஒலிம்பிக் சுடரை எவரெஸ்ட் சிகரத்துக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இங்கிருந்து சீனாவின் முக்கிய நகரங்களுக்கு ஒலிம்பிக் சுடர் எடுத்துச் செல்லப்படவுள்ளது.