ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஒபன் டென்னிஸ் போட்டிகளின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி இணைகள் தோல்வியுற்றன.
இப்போட்டிகளின் தரநிலையில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் பூபதி - பகாமஸின் மார்க் நெளலஸ் இணை தங்களது இரண்டாம் சுற்றில், ஸ்பெயின் ஃபெலிசியானோ லோபஸ் - ஃபெர்ணாண்டோ வெர்டாஸ்கோ இணையை எதிர்கொண்டது.
இதில் பூபதி - நெளலஸ் இணை 7-6 (4) 4-6 7-10 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் இணையிடம் தோல்வியுற்றது.
அதேபோல், இந்தியாவின் பயஸ் - ஆஸ்திரேலியாவின் பால் ஹான்லி இணை (தரநிலையில் 8-வது இடம்) தங்களது இரண்டாம் சுற்றில் 6-4 3-6 6-10 என்ற செட் கணக்கில், பொலிஷின் மனிசுஸ் ஃப்யூர்ஸ்டன்பெர்க் - மார்கோன் மாட்கோவ்ஸ்கி இணையிடம் தோல்வியைத் தழுவியது.
இந்த டென்னிஸ் தொடரில், இரு இந்திய வீரர்களுக்குமே முதல் சுற்றில் விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.