உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் கால் இறுதிப் போட்டியில் ரடெக் ஸ்டெபா னெக்கிடம் அதிர்ச்சித் தோல்வியுற்றார்.
செக் குடியரசை சேர்ந்த ஸ்டெபானெக் உலக தரவரிசையில் 27 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் 76 76 விகிதத்தில் பெடரரை வீழ்த்தினார். இவ்வருடம் 5 மாதங்கள் முடிவதற்குள் ரோஜர் பெடரர் 6 ஆவது தடவையாக தோல்வியுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் அவர் 9 போட்டிகளில் தோல்வியுற்றிருந்தார்.
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஸ்டெபானெக் சேர்பிய வீரர் நோவாக் ஜோவிக்குடன் மோதவுள்ளார்.