சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜஸ்டின் ஹெனின் திடீரென அறிவித்துள்ளார்.பெல்ஜியத்தை சேர்ந்த 25 வயது டென்னிஸ் வீராங்கனை ஹெனின். இந்த ஆண்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தார். போதிய தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதாக வெளிப்படையாக கூறினார்.
இவர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இது குறித்து ஹெனின் கூறுகையில்,""டென்னிஸ் அரங்கில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன். இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்கமாட்டேன்.ஒரு குழந்தையின் கனவு முடிவுக்கு வந்துள்ளது,'' என்றார். ஏழு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஹெனின் திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது டென்னிஸ் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கக் கூடும்.