தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. டாஸில் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங்கில் இறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அபாரமாக விளையாடியது.
கெüதம் கம்பீர் 79, ஷிகர் தவாண் 68 ரன்களை குவித்து இந்த அணிக்கு பெரும் வலுவினை சேர்த்தனர். வீரேந்திர சேவாக் ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை இந்த அணி குவித்தது.
இதையடுத்து களம் இறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் அதிகபட்சமாக ஆர்.ஜி. சர்மா 35 ரன்களை குவித்து அவுட் ஆனார். வேணுகோபால் ராவ் 34 ரன் எடுத்த நிலையில் சோயிப் மாலிக் கேட்சில் அவுட் ஆனார்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை இந்த அணி எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது.
சுருக்கமான ஸ்கோர்-டெல்லி டேர்டெவில்ஸ்: கம்பீர் (79), தவான் (68), மஹரூப் (19), தில்ஸôன் (16), திவாரி (4).
டெக்கான் சார்ஜர்ஸ்: கில்கிறிஸ்ட் (14), அப்ரிடி (33), கிப்ஸ் (22), சர்மா (35), ஸ்டைரீஸ் (29), வேணுகோபால் ராவ் (34), ரவி தேஜா (9), சிங், ஒஜா, விஜயகுமார், சர்வேஷ் குமார் ஆகியோர் தலா 1.