பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக கலந்து கொள்ள முடியாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது,'' என சானியா தெரிவித்துள்ளார்.இந்தியாவின் இளம் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா. 22 வயதான இவர் டபிள்யு.டி.ஏ., அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் 33வது இடமும், இரட்டையர் பிரிவில் 19வது இடமும் வகித்து வருகிறார்.
கடந்த மார்ச் முதல் வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இவருக்கு ஏப்.,10 ல் புளோரிடாவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் காயத்தில் இருந்து முழுமையாக மீளமுடியாமல் பிசியோதெரபிஸ்ட் ரேணுகாவிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இவர் வரும் 25ம் தேதி துவங்கும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்குபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சானியா கூறுகையில், ""பிரெஞ்ச் ஓபன் போட்டியில் ஆட முடியாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு உள்ளது. கூடிய சீக்கிரத்தில் திரும்ப விளையாட இயலும் என நம்புகிறேன்,'' என்றார்.