06-03-2008
 |
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
படங்களை விநியோகம் செய்வதில் சில முறைகள் இருக்கின்றன. எம்.ஜி எனப்படும் முறையை செய்யவே பல தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள். குறிப்பிட்ட தொகையை விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, அது வசூல் ஆவதற்கு மேல் வரும் தொகையை இருவரும் பிரித்துக் கொள்வது. ஒருவேளை கொடுத்த தொகை வசூல் ஆகவில்லை என்றால், அந்த நஷ்டத்திற்கு தயாரிப்பாளர் பொறுப்பேற்று கொள்ள மாட்டார். மற்றொன்று டிஸ்ட்டிபியூஷன். ஒருவேளை விநியோகஸ்தர் கொடுத்த பணம் வசூல் ஆகவில்லை என்றால், வசூல் ஆனது போக மீதி தொகையை தயாரிப்பாளர் தர வேண்டும். இது சற்று ரிஸ்க் என்பதால் இந்த முறைக்கு பலர் ஒப்புக் கொள்வதேயில்லை. தனது வெள்ளித்திரை படத்தை டிஸ்ட்ரிபுயூஷன் முறையில் வியாபாரம் செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். எம்.ஜி. முறையில் வாங்கவே விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கும்போது ஏன் பிரகாஷ்ராஜ் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று திகைக்கிறார்கள் விஷயத்தை கேள்விப்பட்டவர்கள். ம்ம்ம்... ஏதாவது காரணம் இருக்கும்.
|