கந்தசாமியில் பெண் வேடம் உள்பட டிரிபிள் ரோலில் கலக்கிக் கொண்டிருக்கும் விக்ரம், அடுத்து டபுள் ரோலில் கலகலக்க வருகிறார்.
அந்நியனில் ஒரே விக்ரம் 3 விதமான அவதாரங்களை பூண்டு நடித்திருந்தார். ஆனால் முதல் முறையாக கந்தசாமி படத்தில் 3 வேடங்களில் கலக்குகிறார் விக்ரம். இதில் ஒரு பெண் வேடமும் அடக்கம்.
இந்தப் படத்தில் படு தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் இதை முடித்து விட்டு அடுத்து ஒரு அட்டகாசப் படத்திற்குத் தயாராகிறார்.
இந்தப் புதிய படத்தை தயாரிக்கப் போவது ராஜகாளியம்மன் பிலிம்ஸ் மோகன் நடராஜன். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
இதில் விக்ரமுக்கு இரண்டு வேடங்களாம். இந்தப் படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்குமாம். கூடவே வெற்றிப் பட இயக்குநர் ரவிக்குமாரும் இருக்கிறார் என்பதால் படம் விசேஷ அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
கந்தசாமி படம் முடிந்த கையோடு இந்தப் படத்தில் நடிக்க உத்தேசித்துள்ளார் விக்ரம்.
கதாநாயகி மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகக் கூடும்.
ஹீரோயின் யாருப்பா?