அந்த தாடிக்கார டாக்டர் இப்போது எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. ஆனால், அவரின் கைப்பாவையாக இருந்து, கலையுலகில் சாகாவரம் பெற்றுவிட்ட சில்க் ஸ்மிதா பற்றி இப்போது பேச்செடுத்தாலும், செவிமடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். அவர் இறந்து இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் சில்க் பற்றி பரபரப்பு கிளம்பியிருக்கிறது. பரபரப்பை கிளப்பியிருப்பவர்ர் இயக்குனர் திருப்பதிராஜா. சில்க் ஸ்மிதா பற்றி இவர் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகம் ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறதாம். அதில் சில்க் ஸ்மிதாவின் மரணம் குறித்த தகவல்களையும் எழுதியிருக்கிறாராம். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்க, அது தற்கொலையல்ல. அவரது மரணத்தில் பல மர்மங்கள் புதைந்து கிடக்கிறது என்று தனது புத்தகத்தில் சொல்லியிருக்கிறாராம் திருப்பதிராஜா. இந்த புத்தகம் வெளிவந்தால் பல பெரிய மனிதர்களின் தலை உருளும் என்கிறார். முக்கியமான விஷயம் என்னவென்றால், சில்கின் முதல் படம் வீணையும் நாதமும். கடைசி படம் இன்னும் வெளிவராத தங்க தாமரை. இரு படங்களையும் இயக்கியிருப்பவர் இந்த திருப்பதி ராஜாதான். எல்லாரும் அவரை கவர்ச்சி கன்னியாகதான் காட்டியிருக்கிறார்கள். நான் அவரை குத்துவிளக்கு போல் என் படத்தில் காட்டியிருக்கிறேன். ஏனென்றால் அவருக்கும் எனக்கும் இருந்த உறவு அப்படி என்று ஒரு குண்டை தூக்கி போடுகிறார். இதென்னடா புதுசு புதுசா பூதம் கிளம்புது?