அம்மா வேடத்தில் நடிக்கிறார் சிம்ரன் என்றால் எப்படி கோபம் வரும்? நமக்கே இப்படி என்றால் சிம்ரனுக்கு? அப்படி ஒரு செய்தி எப்படி வந்ததோ தெரியாது. நான் சூர்யாவுக்கு அம்மாவாக நடிப்பதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்கிறார் சிம்ரன். அதாவது வயதான அம்மாவாக! வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுடன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். அம்மாவாக நடிக்கிற காலம் இப்போது இல்லை. அதற்கு இன்னும் நிறைய வருடங்கள் இருக்கிறது என்கிறார் காட்டமாக. முன்பெல்லாம் சினிமா படப்பிடிப்பிற்கு தீபக்குடன் வர மாட்டார் சிம்ரன். இப்போது அப்படியில்லை. சின்னத்திரை படப்பிடிப்புக்கு தன்னுடைய கணவர் தீபக்குடன் வருகிறார். இடைவெளியில் கலகலவென்று அரட்டை அடிக்கிறார்கள். சின்னத்திரைக்கு வந்ததால், இந்த ஒரு விஷயத்தில் எதை பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார் சிம்மு .