ஒரே அறை! உலகத்திற்கே தெரிந்த பெண்ணாகிவிட்டார் பத்மப்ரியா. அதன்பின் தமிழின் கதவுகள் பத்மப்ரியா என்றாலே படக்கென்று மூடிக் கொள்கின்றன. ஒப்புக்கொண்ட ஒரே படத்திலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டார். ஒரு கதவு மூடினால் மறுகதவு திறக்கும் என்பார்கள். தமிழில் துரை என்ற படத்திலிருந்து நீக்கப்பட்ட பத்மப்ரியாவுக்கு இந்தி பட கதவுகள் திறந்திருக்கின்றன. ஏ.வெங்கடேஷ் இயக்கி வருகிற படம் துரை. காஸ்ட்யூம் செலவுக்கு அதிக பில் போட்டதற்காக இவரை அந்த படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனால், இந்த தகவலை பத்மப்ரியா இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில்தான் இந்த இந்தி வாய்ப்பு. ஸ்டிரைக்கர் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறாராம் பத்மப்ரியா. வெறும் நடிப்பு மட்டுமல்ல, மது பார்களில் நடனமாடும் பெண்ணாக ஏகப்பட்ட கவர்ச்சியாக நடிக்க போகிறாராம். ஆச்சர்யப்படுபவர்களிடம், நான் எப்போதும் கவர்ச்சிக்கு எதிரியல்ல, யாரும் இதுவரை என்னை அப்படி நடிக்க அழைக்கவில்லை அவ்வளவுதான் என்கிறாராம் பத்மப்ரியா.
பி.கு- டைரக்டர் சாமியிடம் இவர் மீண்டும் வாய்ப்பு கேட்டார் என்று வெளிவரும் செய்திகளில் 100 க்கு 150 சதவீதம் பொய். மிருகம் படப்பிடிப்புக்கு பிறகு சாமிக்கு போன் செய்யவே இல்லையாம் இந்த பத்மப்ரியா