சினேகாவிலிருந்து, சிம்ரன் வரைக்கும் தூண்டில் போட்டு பார்த்த இயக்குனர் மு.களஞ்சியம், யாரும் ஒப்புக் கொள்ளாததால் கற்றது தமிழ் அஞ்சலியை தனது படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துவிட்டார். முதன் முதலில் இவரை நடிக்க அழைத்து வந்ததே இவர்தானாம். சிறந்த கதைக்கான தமிழக அரசின் விருது பெற்ற கிழக்கும் மேற்கும் என்ற படத்தை இயக்கியவர் இவர்தான். தொல் திருமாவளவனை வைத்து இவர் இயக்க இருந்த திரைப்படத்தை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு தானே நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் களஞ்சியம். இடையில் வெவ்வேறு படங்களில் பிசியாகிவிட்ட அஞ்சலியிடம், தான் படம் இயக்குகிற விஷயத்தை சொல்லி கால்ஷீட் கேட்டாராம் களஞ்சியம். தன்னை அறிமுகப்படுத்த நினைத்த குருநாதர் ஆயிற்றே. மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டாராம் அஞ்சலி. அங்காடி தெருவில் நடித்து வரும் இவர், அதற்கு அடுத்த படமாக இந்த படம் வருகிற மாதிரி கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.