நடிகர் சத்யராஜ் மீது ரொம்பவே அபிமானம் கொண்டவர் பிரகாஷ்ராஜ். இதனால் தனது டூயட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்துக்கு சத்யராஜ் என்று பெயர் வைத்துள்ளார்.
தற்போது டூயட் மூவிஸ் 'மயிலு' என்ற படத்தை தயாரித்து வருகிறது. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ஜீவன் இந்த படத்தை இயக்குகிறார். 'சத்யராஜ்' படத்தை இயக்குவதும் இதே ஜீவன் தான்.
இயக்குனராக இரண்டு படங்கள் கைவசம் இருந்தாலும், 'சூரி'யில் தன்னை ஒளிப்பதிவாளராக அறிமுகம் செய்த ஸெல்வனின் 'கிருஷ்ணலீலை' என்ற புதிய படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் ஜீவன். காரணம், நன்றிக்கடன்.