சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மிஷ்கினின், கனவு படமான 'நந்தலாலா'வுக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா.
இளையராஜாவின் இசையில் படமெடுக்க வேண்டும் என்பது, அவரது தீவிர ரசிகரான மிஷ்கினுக்கு நீண்ட நாளாகவே இருந்து வந்துள்ளது.
இந்தக் கனவைப் பூர்த்தி செய்யும் விதமாக தனது 'நந்தலாலா' படத்துக்கான வேலையில் ஈடுபட்டுள்ள மிஷ்கின், இளையராஜாவிடம் கதையைச் சொல்லி, அவரது இசைவைப் பெற்றுள்ளார்.
விஷாலின் அடுத்த வருடத்துக்கான கால்ஷீட்தான் மிஷ்கினிடம் தரப்பட்டுள்ளது. இதனால், இடையே காலத்தை வீணடிக்காமல் தனது நந்தலாலாவை முடித்துவிடுவதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குனர்.
'நந்தலாலா' ஏற்கெனவே ஃபோட்டோ செஷனுடன் கைவிடப்பட்ட நிலையில், இப்போது முழுமூச்சுடன் களமிறங்கியுள்ள மிஷ்கின் தனது 'ஹோசிமின்' தாடியை எடுத்துள்ளார்.
இதற்கு, 'நந்தலாலா'வில் தானும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதே காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.
'கத்தாழைக் கண்ணழகி' ஸ்னிகிதா நடிக்கும் இப்படம், ஒரு சிறுவனைப் பற்றிய கதை கொண்டது.