ஆணானப்பட்ட குருவியையே ஆந்தை மாதிரி அலற வைக்கிறார் த்ரிஷா. வேறொன்றுமில்லை. குருவி படத்தில் த்ரிஷா சாப்பிடும் பழங்கள், ஜுஸ் வகையறாக்களின் ஒரு நாள் செலவு ஆயிரம் ரூபாயாம். ஒரு பழக்கூடையை சாப்பிட்டால் பரவாயில்லை. இதென்ன ஒரு பழக் கடை கணக்காக இருக்கிறதே என்றுதானே பதறுகிறீர்கள்? நமக்கே இப்படி என்றால்.. குருவிக்கு எப்படியிருக்கும்? இது ஒருபுறம் இருக்க, த்ரிஷாவின் காஸ்ட்யூமர், மேக்கப் மேன், ஹேர் டிரஸ்சர் இவர்களை அழைத்துக் கொண்டு ஷ§ட்டிங் வருவதற்கு ஒரு சுமோ பயன்படுத்தப்பட்டு வந்தது. அவர்களுக்கு வண்டியில் வரும்போது அதிர்வு அதிகமாக இருக்கிறது. எனவே, இன்னோவா அனுப்பினால் சௌகர்யமாக இருக்குமே என்று கருத்து தெரிவித்தாராம் த்ரிஷ். வேறு வழியில்லாம அதற்கும் சரி சொல்லிவிட்டு ஓரமாக நின்று உறுமி கொண்டிருக்கிறது குருவி.