ஏறக்குறைய ரஜினியின் நிஜக்கதை தான் 'குசேலன்'. நட்பை மறக்காத 'சூப்பர் ஸ்டார்' பற்றிய கதை. அதனாலேயே இப்படத்தில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார் ரஜினி.
படத்தில் ரஜினியின் முன்னேற்றத்துக்கு உதவும் பால்ய நண்பராக வருகிறார் பசுபதி. இதில், அவருக்கு ஏழை சவரத் தொழிலாளி வேடம்.
பசுபதியின் வேடத்தை, பஸ் கண்டக்டர் அல்லது பஸ் டிரைவராக மாற்ற முடியுமா என வாசுவிடம் கோரிக்கை வைத்தாராம் ரஜினி. காரணம், நிஜத்தில் ரஜினியின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தது ஒரு ஏழை பஸ் டிரைவர்தான்.
ஆனால், கடைசி நேர கோரிக்கை என்பதால், ரஜினியின் கோரிக்கையை ஏற்க இயலவில்லையாம். எனினும், 'குசேலன்' படப்பிடிப்பில் தற்போது ரொம்பவும் ஈடுபாடு காட்டி நடித்துகொண்டிருக்கிறார் ரஜினி.