அனுஷ்கா... தன் அழகால் ஆ என்று ரசிகர்களை மிரள வைத்தவர். இவர் மாதவனுடன் இணைந்து நடித்த ரெண்டு படம் வெளியானவுடன், எனக்கு உனக்கு என்று ஹீரோக்கள் ரெகமண்டேஷன் செய்தனர் இவருக்கு. அதனாலேயே தனது சம்பளத்தை எடுத்த எடுப்பிலேயே 35-க்கு உயர்த்தினார். அவ்வளவுதான். அத்தனை பேரும் எஸ்கேப். இப்படி ஒரு முடிவை எதிர்ப்பார்க்காத அனுஷ்காவும், கோலிவுட்டே வேண்டாம் என்று கூறி, டோலிவுட்டுக்கு போனார். அங்கே இவர் கேட்ட சம்பளத்தை தாராளமாக வழங்கினார்கள் தயாரிப்பாளர்களும். ஆனால், அனுஷ்கா நடித்த மூன்று படங்களும் வரிசையாக தோல்வியை தழுவ, அங்கேயும் கதவை மூடி விட்டார்கள். தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கும் அனுஷ்கா, முன்னணி இயக்குனர்களின் நம்பரை வாங்கிக் கொண்டு எஸ்.எம்.எஸ் அனுப்பி வருகிறாராம். சம்பள விஷயத்தில் பழைய கறார் போக்கு இல்லை என்பது ஆறுதலாக இருப்பதால், ஒன்றிரண்டு இயக்குனர்கள் சம்மதம் சொல்லியிருக்கிறார்களாம். பார்ப்போம்!