வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுடன் கலக்கிக் கொண்டிருக்கும் சமீரா ரெட்டி அடுத்து அஜீத்துடன் ஜோடி போடவுள்ளார்.
பாலிவுட் புயல் சமீரா ரெட்டி இப்போது தமிழுக்கும் விசிட் அடித்துள்ளார். சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் ஜோடி சேர்ந்துள்ள சமீராவுக்கு அடுத்து ஒரு லக்கி பிரைஸாக அஜீத் படம் கிடைத்துள்ளது.
சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்க, கெளதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்க உருவாகும் புதிய படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் சமீரா.
தற்போது கை வசம் உள்ள இந்திப் படங்களை முடித்துக் கொண்ட பின்னர் அஜீத் படத்திற்கு வரவுள்ளாராம் சமீரா.
தற்போது அஜீத்தும் ஏகன் படத்தில் பிசியாக உள்ளார். அந்தப் படம் முடிய இன்னும் 4 மாதங்கள் ஆகும். அதன் பின்னரே சிவாஜி பிலிம்ஸ் படத்திற்கு வருகிறார் அஜீத். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் சிவாஜி பிலிம்ஸ் படத்தின் ஷூட்டிங் தொடங்குமாம். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீராவின் அடுத்த குறி விஜய்யா, விக்ரமா?